நாட்டை முடக்க அல்லது ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : தயாசிறி ஜயசேகர
நாட்டில் தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றா ளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களைக் கட்டுப்படுத்த சில நாட்களுக்காவது நாட்டை முடக்கவோ அல்லது ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தவோ அரசாங் கம் தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து நேர்மறையாக அரசாங்கம் சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய லாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
விசேட வைத்தியர்கள், அறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதன் படி நாட்டை இரண்டு முதல் மூன்று வாரங் களுக்கு முடக்கினால் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் படி உரியத் தீர்மானம் எடுக்க பொருத்தமானதாக அமையும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நிலைமை யின் படி அது கடினமான சூழ்நிலை என்பதைத் நான் ஏற்றுக் கொள்கிறேன் என ஊடக சந்திப்பில் அவர் தெரி வித்துள்ளார்.
மேலும், நாட்டை முடக்குதல் அல்லது ஊடரங்கு சட்டத்தை அமுல் படுத்தல் போன்ற தீர்மானத்தை அரசியல் கட்சிகளால் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் விடேச சுகாதார அதிகாரிகளின் ஆலோ சனைப் படி தீர்மானம் எடுக்கவேண்டும் என்று நாட்டின் தற் போதைய சூழ் நிலையைக் கருத்திற்கொண்டு அனைத்து கட்சி களும் ஒன்றாக இணைந்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply