இந்தியாவாலும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமாம்

இலங்கை அரசாங்கமே பயங்கரவாதத்தை ஒழித்திருக்கும் நிலையில், மாவோயிஸ்ட் போராளிகளை இல்லாமல் செய்வதற்கு இந்தியாவால் முடியுமென அந்நாட்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  அண்மையில் மாவோயிஸ்ட் போராளிகள் இந்தியப் பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்த கருத்துத் தெரிவித்த சண்டிகாரின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் நிபுணர் முன்னாள் பிரிகேடியர் பி.கே.பொன்வார், மாவோயிஸ்ட் ஒழிக்கப்படுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் போராட்டங்களை நடத்திவந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 30 வருடங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டிய அவர், “இலங்கையால் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கமுடியுமாயின் எமக்குப் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது மிகவும் கடினமானது அல்ல” என்றார். இந்தியாவின் சண்டிகார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் போராளிக் குழுக்கள் மிகவும் சவால் மிக்க குழுவாக விளங்குவதுடன், அதற்கு எதிராக இந்தியப் பாதுகாப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கமும் தமது நாட்டிலுள்ள தலிபான் போராளிகளுக்கு எதிரான மோதல்களை ஆரம்பித்திருந்தது. இதனால் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply