இலங்கையில் ஒரு வாரத்தில் 1386 பேர் பலி, 30,625 பேர் பாதிப்பு, PCR சோதனைகள் குறைப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் PCR பரிசோதனைகளை குறைத்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் 1386 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகி உள்ளதாகவும் 30,625 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கமும் சுகாதார தரப்பினரும் நோயாளர்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என சமன் குற்றம் சுமத்தியுள்ளார்.

19ம் திகதி 22,290 PCR பரிசோதகள் செய்துள்ளதாகவும் 28,500 வரை செய்து வந்த PCR பரிசோதனையை 22,500 வரை குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 850 வரை அதிகரித்துள்ளதாக சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் விஞ்ஞான முறையில் வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply