பாதாள உலகக் குழுவினரை சரணடையுமாறு கோத்தபாய உத்தரவு
ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். அருகில் இருக்கும் காவல்துறை நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் தலைவரும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளைப் பேணக் கூடாது எனவும் அவ்வாறு பேணுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகத்தில் தேயிலை ஏல விற்பனை நடைபெறும் போது கூட பாதாள உலகக் குழுவினர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக தமக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். சில உயர் காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு வழிகளில் கப்பம் கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கப்பம் அல்லது லஞ்சம் பெற்றுக் கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதாள உலகக் குழுவினரை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply