ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்த்த சர்வதேச சதி
ஏப்ரல் 21 ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டில் குழுவொன்று இயங்கி வருவதாக வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அர் இதனைக் கூறினார்.
ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க கத்தோலிக்க தேவாலயங்களில் தொடங்கப்பட்ட இதயசுத்தியுடனான திட்டத்தை பயன்படுத்தி சர்வதேச சதிகள் முன்னெடுக்கப்படுவதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது விடயம் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து தௌிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த தாக்குதல் விடயத்தில் சர்வதேச அளவில் செயற்படும் குழு நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்த சதி செய்வதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திற்கு தௌிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply