புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் ஒழிக்கப்பட வேண்டும்: இலங்கை
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னல்களை ஒழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உனடடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பின் சர்வதேச வலைப்பின்னல்களை ஒழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,இல்லாவிட்டால் மோசமான நிலை தோன்றிவிடுமெனவும் பெல்ஜியம்,லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அதன் உறுப்பு நாடுகளோ தமிழர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தினாலும், அகதிகள் என்ற அந்தஸ்துடன் இருப்பவர்கள் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு ஆதரவு வழங்கவேண்டுமெனக் கூறினார். அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முறையில் பிரசாரங்களை முன்னெடுத்தவர்களை ஐரோப்பிய வாக்காளர்கள் நிராகரித்துவிட்டதாகவும் இலங்கைத் தூதுவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதாக பெல்ஜிக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் சில ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தை சங்கடத்திற்குள்ளாக்கியிருந்தாலும், மௌனம் சாதித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைத் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தாம் நினைத்த தீர்வை முன்வைக்கும் பலம் வாய்ந்தவர்கள் எனப் பிழையாக விளங்கிக்கொண்டமையாலேயே சில ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகளுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply