ஞாயிறு தாக்குதல் குறித்து விளக்கமளிக்க பிரதமர் வத்திக்கான் பயணம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் விரைவில் இத்தாலி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள மாநாடு ஒன்றிற்கு கிடைக்கப்பெற்ற அழைப்பை ஏற்று இவர்கள் அங்கு செல்ல உள்ளனர்.
அத்துடன் இவர்கள் இருவரும் வத்திக்கான் விஜயம் செய்ய இருப்பதாகவும் தெரிய வருகிறது.ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் நம்பிக்கையில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ள பின்னணியில் இது விடயம் குறித்து வத்திக்கானுக்கு தெளிவுபடுத்தும் சந்தர்ப்பமாக இந்த விஜயத்தை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்திக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply