ஒருபிடி மண்ணையும் தாரைவார்க்க இடமளியோம் :  வே.இராதாகிருஸ்ணன்

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்க இடமளிக்கமாட்டோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 11 ஆயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது எம் பெருந்தோட்ட சமூகத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து செயற்பாடாகும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீறி எவரும் உள்நுழைந்தால் அதன் விளைவு எரிமலை தாக்கத்தை விட பெரிதாக இருக்கும்.

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் காணிகளை அபகரிக்க நினைக்கும் எவராக இருந்தாலும் பரவாயில்லை. அதை மலையக மக்கள் முன்னணியோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியோ பார்த்துக் கொண்டிருக்காது.

எம் நிலத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்துச் செல்ல முட்பட்டாலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மலையக மக்கள் முன்னணியும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் தகுந்த நடவடிக்கை எடுக்குமென இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply