வடக்கில் ஆயுதக்குழுக்கள் இயங்கவில்லை: டக்ளஸ் தேவானந்தா
வடக்கில் ஜனநாயகரீதியில் தேர்தல் நடைபெறும் எனவும் எந்த ஆயுதக்குழுக்களும் அங்கு இயங்கவில்லையென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 65 ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தோல்வி நிச்சயம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சில எதிர்க்கட்சிகளே தமது தோல்வியை நியாயப்படுத்த வடக்கில் ஆயுதக் குழுக்கள் நடமாடுகின்றன என்ற பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றன.
இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தது. ஒன்று புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது. இரண்டாவது தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது.
இதில் முதல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் நிவாரணக் கிராமங்களிலேயே தொடாந்தும் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் எதிக்க்கட்சிகள் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. அதில் உண்மையில்லை.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் தமது செந்த இடங்களில் குடியமர்தப்படுவர். அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு துரிதமாக மேற்கொண்டுவருகின்றது” என்றும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply