வவுனியா நலன்புரிநிலைய மக்களுக்கு இராணுவத்தினரால் பொருட்கள் கையளிப்பு
இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சுமார் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை இராணுவம் வழங்கியுள்ளது. புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த பொருட்களை இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு வழங்கி வைத்தார். வன்னி பாதுகாப்பு படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று முன்தினம் முதற் தடவையாக வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போதே இடம்பெயர்ந்த மக்களுக்கான பொருட்களையும் வழங்கிவைத்தார்.
மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இராணுவத்தின் சகல தரங்களிலுள்ள அதிகாரிகளிடம் சேகரிக்கப்பட்ட ஒருநாள் சம்பள த்தின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுககும் அவர்களது பிள்ளைகளுக்கும் தேவையான 3.8 மில்லியன் ரூபாய பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள், பால் மா வகைகள், சிறுவர் உடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் இராணுவம் கொள்வனவு செய்து விநியோகித்துள்ளது. வவுனியா விமானப் படைத் தளத்தை சென்றடைந்த இராணுவத் தளபதி தலைமை யிலான உயர் அதிகாரிகளை வன்னி பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
தளபதியாக பதவியேற்ற பின்னர் முதற் தடவையாக விஜயம் செய்தமையினால் அவருக்கு விசேட மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகத்திறகு விஜயம் செய்த அவர் அங்கு நடைபெற்ற சமய வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட இராணுவத் தளபதி இடம் பெயர்ந்த மக்களுக்கு பொருட்கள் விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு பொருட்களை விநியோகித்து வைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply