உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி : கமல்ஹாசன் அறிவிப்பு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள்,கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே’ என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply