சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 2.5 பில். டொலர் கடன்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வ தேச நாணய நிதியம் முடிவு செய்துவிட்ட தாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.இலங்கை சர்வதேச நாணய நிதியத்தி டம் 1.9 பில்லியன் டொலர்களை கடனாக கோரியிருந்த போதும் அதனை 2.5 பில்லி யன் டொலர்களாக அதிகரித்து வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்து விட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
இலங்கை கோரியிருந்த கடன் தொகையை விட கூடுதலான தொகையை வழங்க இண ங்கியுள்ள சர்வதேச நாணய நிதியம் தனது முதலாவது கூட்டத்தை ஜுலை 24 ஆம் திகதி நடத்துகிறது.
கடன் தொகை ஜுலை, செப்டம்பர், நவ ம்பர் மாதங்கள் என எட்டு தவணைகளில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. முதற் தவணையில் வழங்கப்படும் கடன் தொகைக்கு 0.5 வீத வட்டியே அறவிடப்ப டவுள்ளது. கிடைக்கும் கடன் தொகை தொடர்பாக சகல தரவுகளையும் எம்மால் விளக்கமாக கூறமுடியும். வரவு செலவு திட்டம் உள்ளிட்ட சகல திட்டங்களும் பாதுகா க்கப்பட்டே கடன் தொகை பெறப்படுகிறது.
புலிகளை அழித்துவிட முடியாது. சர்வ தேச நாணய நிதியத்திடம் கடன் பெற முடி யாது என எதிர்க் கட்சியினர் கூறிவந்தனர். புலிகளையும் அழித்துவிட்டோம். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் கடனை பெறப் போகிறோம். இது மஹிந்த அரசின் வெற்றி எனவும் அமைச்சர் கூறினார்.
எமது பொருளாதாரத்தை முறியடிக்க வேண் டும் என்ற நோக்கில் புலிகள் இறைவரித் திணைக்களத்தின் மீது தாக்குதலை மேற்கொண் டனர். ஒரு வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதலை அவர்கள் நடத்தினர். ஆனால் திங்கட்கிழமையன்று திணைக்களத்தின் நட வடிக்கைகளை நாம் வழமைபோல் ஆரம் பித்தோம். இதனால் எமது பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது என்றும் அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply