ரெயில் தடம்புரண்டு விபத்து : 3 பேர் பலி, பலர் காயம்
அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 4 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ரெயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன.
3 பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகளை மீட்டு பாதுகாப்பாக அனுப்பும் பணியும் நடைபெறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply