இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொலை மிரட்டல்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கு சி.பி.ஐ மாவோயிஸ்டு அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜார்க்கண்டில் உள்ள மாவோயிஸ்டு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக அழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவரது கனவு நிறைவேறாது. மாவோயிஸ்டுகள் இயக்கத்தை அழிக்க எவராலும் முடியாது. சிதம்பரத்துக்கு தைரியம் இருந்தால் அவர் ஜார்க்கண்ட் வரட்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட முடிவுதான் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுளளது.
இது தவிர ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்தித்த நேரிடும் என்றும் அந்த அறிவிப்பில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தியுள்ளனர். சி.பி.ஐ மாவோயிஸ்டுகளின் ஜார்க்கண்ட் மாநில மத்தியக் குழு உறுப்பினர் அனுப்ஜி என்பவரது பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “மாவோயிஸ்டுகள் இயக்கம் முற்றிலும் அழிவும் நிலையில் உள்ளது. இது வெறும் மிரட்டல்தான்’ என்று கூறியுள்ளனர். இது குறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply