எதிர்கால சந்ததிகளையும் நாட்டையும் ஏற்றம் பெறச் செய்வதே எமது நோக்கம்: ஜனாதிபதி
குரோத அரசியலைக் கை விட்டு நாட்டின் எதிர்காலத்திற்காகச் செயற்படுவதற்கு நாட்டை நேசிக்கும் அனை வரும் முன்வர வேண்டு மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.நாட்டின் சகல பிரஜைகளினதும் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி.தம்மைப்பற்றிச் சிந்திக்காது எதிர்கால சந்ததியைப் பற்றி சிந்திக்கும் மக்களின் துணிவாலேயே பயங்கரவா தத்திலிருந்து தாய்நாட்டை மீட்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கியதேசியக் கட்சியிலி ருந்து ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியில் இணை ந்த பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 4,000 பேர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டி ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் வெற்றியை அடிப் படையாகக் கொண்டு நாம் செயலாற்றுவதில்லை. நாட்டி னதும் மக்களினதும் எதிர் கால சுபீட்சத்தை கருதியே நமது செயல்கள் தொடர்கி றது. இன்றைய தினத்தை கருத்திற் கொண்டு செயல்ப டாமல் நாளைய சந்ததிக ளையும் நாட்டையும் ஏற் றம் பெறச் செய்வதே எமது நோக்கமாகும். சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பல்வேறு அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் முப்பது ஆண்டுகளாக நிலவி வந்த எவராலுமே தோற்கடிக்க முடியாதென கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்து இன்று முழு நாட்டையும் ஐக்கியமாகவும் சகோதரத்துவமாகவும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஊவா பிரதேசத்தவர்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு அபிவிருத்தியையும் செழிப்பையும் கருத்திற் கொண்டு செயல்பட முன்வர வேண்டும்.
இன்று நாட்டில் சுதந்திரமாக நடமாடவும் வணக்கஸ்தலங்களுக்குச் செல்லவும் அன்றாட கடமைகளை எவ்வித அச்சங்களின்றியும் வழிபடக் கூடிய நிலைமைகளையும் நமது இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தால் நிலைநாட்டி உள்ளனர். இன்று எல்லைக் கிராமங்கள் என்ற நிலையே இல்லை, இதே போலவே இன்று நாட்டில் கஷ்ட கிராமங்கள் என்று இருப்பது முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். எல்லாக் கிராமங்களையும் செழிப்பான கிராமங்களாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஊவா மக்களாகிய நீங்களும் அக்கஷ்ட பிரதேசங்களை செழிப்படைய வைப்பதில் பங்காளியாக வேண்டும்.
பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் பின் நடைபெறும் முதலாவது தேர்தல் ஊவா மாகாண தேர்தலாகும். நம்மீது பல்வேறு அழுத்தங்களை இன்னும் கொடுத்துவரும் சர்வதேசம் இத்தேர்தலை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்றார். சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கட்டட நிர்மாண துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் சீ.நந்தமெத்யூ உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply