ஜே.ஆர்.ஜயவர்தன நினைவாக சமூகப் பணியில் சஜித் பிரேமதாஸ

கொரோனா அனர்த்தத்தினால் முழு இலங்கையும் பெரும் நெருக்கடியில் இருக்கும் இவ்வேளையில் எமது சொந்த மக்களுக்காக ஏதாவது நடைமுறைச் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ”எதிர்க்கட்சியின் மூச்சு ‘ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 33 வது கட்டமாக இருபது இலட்சத்து பதினாறாயிரம் ரூபா (2,016,000/-) பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.

மறைந்த சனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களின் ஞாபகார்த்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில்

  1. Infusion Pump 4 இயந்திரங்கள் (105,000 x 4 = 420,000) 2. Syringe Pump 4 இயந்திரங்கள் (104,000 x 4 = 416,000) 3. Multipara Monitor 4 இயந்திரங்கள் (295,000 x 4 = 1,180,000) மொத்தம் 2,016,000 என்றவாறு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். இதற்கு முன்னர் 32 கட்டங்களில் 97,234,000 ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply