சாவகச்சேரியில் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் மத்திய நிலையம்
சாவகச்சேரியில் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று (02) மு.ப. 11.00 மணிக்கு தனங்கிளப்பு வீதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் மையத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக செவணத நிறுவன முகாமையாளர் மற்றும் வேள்ட் விஷன் நிறுவன அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த வளங்கள் சுத்திகரிப்பு நிலையமானது ஜேர்மன் நாட்டின் BMZ நிறுவன நிதி உதவி மற்றும் ஜேர்மன் வேள்ட் விஷன் நிறுவனத்தின் உதவியுடன் சாவகச்சேரியில் செவணத மற்றும் வேள்ட் விஷன் நிறுவனங்களால் “பின்லா” கழிவு முகாமைத்துவச் செயற்திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடிக்கல் நடும் வைபவத்தில் நகரசபையின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி, நகரசபையின் உப தவிசாளர் பாலமயூரன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தளிர்ராஜ், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் செவணத, வேள்ட் விஷன் நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். குறித்த மீள் உருவாக்கும் மத்திய நிலையம் ஊடாக பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் அற்ற நகரை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply