நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 69 பேர் உயிரிழப்பு : 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு
ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தின் மேற்குப்பகுதியில் அரசுப்படைகளுக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுக்கும் இடையே பல்லாண்டு காலமாக சண்டை நடந்து வருகிறது. எப்போதும் அந்த பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இந்த நிலையில் நைஜரில் புர்கினோ பாசோ மற்றும் மாலி நாடுகளின் எல்லைப்பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல், உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது. இந்த தாக்குதல் தில்லாபெரியின் மேற்கு பகுதியில், நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அதாப் டாப் என்ற கிராமத்தில் 2-ந் தேதி நடந்துள்ளது.
அதுபற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளியே வந்துள்ளன. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த பாதுகாப்பு படையினரை, அதே போன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த கிரேட்டர் சகாரா பகுதியை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கினர். துப்பாக்கிகளால் ஒருவரை ஒருவர் சுட்டனர்.
இந்த தாக்குதலில் 69 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பானிபங்காவ் நகர மேயரும் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் 2 நாட்கள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply