ஈராக் பிரதமர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் ஈராக் பிரதமர் முஸ்தபா- அல்-காதிமியின் வீடு உள்ளது. மேலும் இங்கு அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளன.

நேற்று அதிகாலை ஈராக் பிரதமர் முஸ்தபா – அல்- காதிமியின் வீடு மீது டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். ஈராக் பிரதமரை கொல்ல நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply