சீனா இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது

சர்சைக்குரிய சீன சேதனப் பசளை கப்பலின் ஏற்றுமதியாளர்களான சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளரிடம் இவ்வாறு நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக இவ்வாறு நட்டஈடு கோரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பக்டீரியா உள்ளடங்குவதாக உறுதி செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சீன சேதன உரத் தொகையை எடுத்து வந்த “HIPPO SPIRIT” என்ற கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply