யாழ் மாநகர ஆணையாளருக்கு கொரோனாத் தொற்று

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் கொரோனாத் தொற்றிற்கு இலக்கானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் நேற்று முதல் உடல் நலக் குறைவாக காணப்பட்டதனால் இன்றைய தினம் காலை பரிசோதனையை மேற்கொண்டார்.

இவ்வாறு இடம்பெற்ற பரிசோதனையின்போதே ஆணையாளருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதும் மாநகர சபையின் ஏனையோருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply