கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது?: கடும் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய ஜேர்மனி திட்டம்

ஜேர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத வகையில், அவர்களுக்கு மட்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி யாராவது வெளியே வருகிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, பொலிசார் தொடர்ந்து மக்களை சோதனையிட்டுவருகிறார்கள்.

தற்போது, அதே போன்றதொரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர ஜேர்மனியும் திட்டமிட்டு வருகிறது.

காரணம், ஜேர்மனியில் 14 மில்லியன் பேர் இன்னமும் தடுப்பூசி பெறாத நிலையில், கொரோனாவின் நான்காவது அலையுடன் போராடி வருகிறது அந்நாடு. நேற்று ஒரே நாளில் ஜேர்மனியில் புதிதாக 32,048 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 265 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

இந்நிலையில், புதிதாக அரசு அமைக்க உள்ள SDP அரசு, தடுப்பூசி பெறாதவர்கள் வேலைக்கு செல்வது மற்றும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இது, உண்மையில், தடுப்பூசி பெறாதவர்களுக்கான பொதுமுடக்கம் என்கிறார் SDP நாடாளுமன்றக் குழுவின் தலைவரான Dirk Wiese.

ஜேர்மனியில், தடுப்பூசி பெறத் தகுதியுடைய 14 மில்லியன் ஜேர்மானியர்கள் இன்னமும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply