லண்டனில் இருந்து யாழ் வந்தவர் கொரோனாவால் மரணம்

லண்டனில் இருந்து கடந்த மாதம் யாழ்ப்பாணம் திரும்பியவர் கொரோனா காரணமாக நேற்றைய தினம் மரணமடைந்தார். இதன்போது நடராசா மிரேஸ்குமார், வயது 29 என்னும் கொழும்புத்துறையைச் சேர்ந்தவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

வீட்டில் இருந்த சமயம் நேற்றுக் காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீழ்ந்தவரை அவசரமாக போதனா வகத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்பே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதோடு மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply