அமைச்சராகத் தான் பதவி வகிக்கும் வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது : உதய கம்மன்பில
அமைச்சராகத் தான் பதவி வகிக்கும் வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது என எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தின புரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.
வெளிநாட்டு நாணய முகாமைத்துவத்தில் சுத்திகரிப்பதை விட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வது மலிவானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
டொலர் பிரச்சினை ஏற்பட்டால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூட நேரிடும் என தான் கடந்த செப்டெம்பர் மாதம் கூறியதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை முன்னதாக பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த ஹேசா விதானகே, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சம்பந்தமாக நாட்டு மக்களுக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அது குறித்த விடயங்களை தெளிவுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply