கோவேக்சினுக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

முற்றிலும் இந்திய தயாரிப்பான ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது.இந்தநிலையில், இங்கிலாந்து தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள். அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யவோ, இங்கிலாந்தில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply