ஊடக சட்டங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி : டலஸ் அழகப்பெரும
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தற்போது நடை முறையில் உள்ள சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங் கீகாரம் வழங்கியுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறு வனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி இலங்கை ஊடக கொள்கையொன்றைத் தயாரிப்பது தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் தெரி வித்தார்.சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களின் பயன்பாடு மற்றும் நடத்தை பற்றிய தொழில்சார் திறன்கள் மற்றும் கல்வியுடன் கூடிய ஊடகவிய லாளர்களை முன்வைப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்க வேண்டியதன் அவசியமும் குறிப்பிடப்பட்டது.
உலகளாவிய போக்குகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மற்றும் தொடர் பாடல் துறைகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குத் தேவையான வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் மற்றும் வெகுஜன ஊடக நிறுவனங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கை கள் மற்றும் நெறிமுறைகளைத் திருத்துவதற்கான தேவை அங்கீகரிக் கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஊடகம், சந்தைப்படுத்தல், கல்வி, சட்டம், நிர்வாகம் மற்றும் பொருளா தாரம் போன்ற துறைகளில் அனுபவமுள்ள நபர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக ஊடகத்துறை அமைச் சரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத் திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply