‘ஒமிக்ரான்’ வைரஸ்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம்) உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, “பண்டிகைகள், பிற கொண்டாட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அவசியம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வகையிலும் பாதுகாப்பு அம்சங்களை விட்டு விடக்கூடாது. நமது பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய வகை வைரஸ் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் தொடர்ந்து வரும் ஆபத்து, வைரசிடம் இருந்து நம்மை பாதுகாக்கவும், அதன் பரவலைத்தடுக்கவும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது அவசியம் என்பதை நினைவுபடுத்துகிறது. நாடுகள் கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply