முழு அளவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் இடையேயும் ஒமிக்ரான் பரவல் : இங்கிலாந்து பிரதமர்

கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, தொடக்க நிலையில், புதிய வகை கொரோனாவை பற்றி நமக்கு அதிகம் தெரியாது.

எனினும் கூட நம்முடைய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து அதுபற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒமிக்ரான் மிக விரைவாக பரவி வருகிறது என தெரிய வந்துள்ளது.  இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டவர்கள் இடையேயும் இந்த வைரசானது பரவ கூடும் என்று தெரிவித்து உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply