பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை: கனடா நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்ட மசோதா ஒன்று, கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும்.

இந்த சட்ட மசோதாவை ஆளும் லிபரல் கட்சி மட்டுமல்லாது, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களுடன், லிபரல் கட்சி எம்.பி.க்கள் கை குலுக்கியதும், கட்டித்தழுவியதும் அங்கு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சட்ட மசோதா மீது தனது கட்சி எம்.பி.க்கள் சுதந்திரமாக வாக்கு அளிக்க எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் எரின் ஓ டூல் அனுமதி அளித்திருந்தார்.

ஆனாலும் உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு அளித்தது ஆச்சரியம் அளித்தது என்று லிபரல் கட்சி எம்.பி. சீமஸ் ஓ ரீகன் கருத்து தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவேறியது குறித்து சுற்றுலாத்துறை மந்திரியும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆலோசகருமான ரேண்டி பாய்சனாலட் கருத்து தெரிவிக்கையில், ‘‘யாரும் சித்ரவதைக்கு சம்மதிக்க மாட்டார்கள்’’ என குறிப்பிட்டார்.

இந்த மசோதா மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் யாரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply