யாழ்ப்பாணம் சுற்றுலாப்புரியாக மாற்றப்படும் : அமைச்சர் பைசல்

யாழ்ப்பாணம் சுற்றுலாப்புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத்தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”முன்னாள் யுத்தகளமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகை சிறப்பம்சங்கள் குறித்துப்பிரசாரம் செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும்.

வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருகிறது.பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply