தாண்டிக்குளம் -ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணி டிசம்பருக்குள் பூர்த்தி

வடக்கு வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்கு முன் பூர்த்தி செய்யப்படுமெனவும் இதுவரை 5 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார். வவுனியா ரயில் நிலைய த்தில் வைத்து கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டு வருகிறது. இரு ரயில் நிலையங்களுக்குமிடையில் 5 பாலங்கள் உள்ளதோடு இவற்றில் இரு பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான பாதை அமைக்க 500 மில்லியன் ரூபா செலவாகும் என முன்னர் மதிப்பிடப்பட்ட போதும் ரயில் பாதை நிர்மாணிக்கும் பணிக்கு இராணுவம் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளதால் 300 மில்லியன் ரூபாவே செலவாகும் என்றார்.டிசம்பர் மாதம் முதல் யாழ் தேவி அடங்கலான ரயி ல்கள் ஓமந்தை வரை பயணமாகும் என்றும் குறிப் பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply