கிளிநொச்சி அரச அதிபர் மீது தொடர்ந்தும் விசாரணை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள் ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார். பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கடந்த வெள்ளிக் கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:- பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார் என்று தடுப்பு காவலில் உள்ள ஒரு புலி உறுப்பினர் தகவல்களை வழங்கினார். இதனை அடிப்படையாகக் கொண்டே பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பிலிருந்து வவுனியாவுக்குச் சென்று அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply