மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த கண்ணிவெடி அகற்றும் பணி துரிதம்

இடம் பெயர்ந்த வட பகுதி மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்காக வடக்கில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் டபிள்யு. கே. குமாரசிறி தெரிவித்தார்.தற்பொழுது இந்தியா உட்பட 8 உள்நாட்டு வெளி நாட்டுக் குழுக்கள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மீள்குடியேற்ற அர சாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மீள் குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ். மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தேர்ச்சி பெற்ற குழுக்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் கூறினார்.

கண்ணி அகற்றும் பணிகள் பூர்த்தியடைவதற்கு அமைய மீள்குடியேற்றங்கள் முன் னெடுக்கப்பட உள்ளதோடு வவுனியா மாவட்டத்தில் இந்த மாத முடிவுக்குள் மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகி ன்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply