வவுனியா முகாம்களில் உள்ள யாழ்குடா நாட்டுமக்களை மீழ்குடியமர்த்த முடிவு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள, யாழ் குடா நாட்டைச் சேர்ந்த சுமார் நாற்பதினாயிரம் மக்களில் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களை சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக யாழ் மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 141 குடும்பங்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply