யுத்தத்தில் சிக்குண்ட 1500 குடும்பங்கள் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளனர்
வன்னிக்குச் சென்று யுத்தத்தால் சிக்குண்டு தற்போது நிவாரணக் கிராமங் கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியு ள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1500 குடும்பங்களை சொந்த இடங் களுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று வவுனியாவில் நடைபெறுகிறது. 60 பஸ் வண்டிகள் மூலம் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள், சமையல் உபகரணங்களை வழங்குதல் பயண ஏற்பாடுகள் குறித்த விசேட கூட்டம் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் வவுனியாவில் நேற்றுக் காலை நடைபெற்றது.
அம்பாறைக்கு 190 பேரும், மட்டக்கள ப்புக்கு 329 பேரும், திருமலைக்கு 292 பேரும், கந்தளாய்க்கு 634 பேரும் இன்று அனுப்பப்படுகின்றனர். யாழ். நகருக்கு 52 குடும்பங்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து செல்கின்றனர் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. எச். சந்திர சிறி தெரிவித்தார்.
அத்துடன் யாழ். நகரில் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 3020 குடும்பங்களும் மீளக் குடியம ர்த்தப்படவுள்ளதாகவும் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் மேற்படி மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து மேலதிக விபரங்களைப் பெற முயற்சித்த போதும் யாழ். மாவட்ட செயலகத்தின் புனர்வாழ்வு பிரிவு அதிகாரி தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்.
இன்று வவுனியாவில் நடைபெறும் மீள்குடியேற்ற நிகழ்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், ரிஷாத் பதியுதீன், வடக்கு ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திர காந்தன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply