வடக்கிற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை தடுக்க ஐ.தே.க சதி

வடக்கிற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை தடுக்க ஐ. தே. க சதி செய்து வருகிறது. ஆனால், வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக வட பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊவா மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வடக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் தெரிவிப்பதுபோல பெருமளவு நிதி தேவையில்லை எனவும் அரசாங்கம் சகல தரப்பினரையும் ஏமாற்ற முயல்வதாகவும் ஐ. தே. க. குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போதும் ஐ. தே. க. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு சதிகளை முன்னெடுத்தது. அதேபோன்றே தற் பொழுது அரசாங்கம் வட பகுதியை அபிவிருத்தி செய்வ தற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கவும் வெளி நாட்டு உதவிகள் கிடைப்பதை நிறுத்தவும் ஐ. தே. க. சதி செய்து வருகிறது. ஆனால் அரசாங்கம் வடபகுதியை அபி விருத்தி செய்யும் நடவடிக்கையை கைவிடாது. வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகள் தடை யின்றி முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் ஊவா, மற்றும் யாழ். வவுனியா உள்ளூ ராட்சி சபைத தேர்தல்களில் ஐ. ம. சு. முன்னணியை வெற்றி பெற வைக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர். பயங்கர வாதத்தை தோற்கடித்து நாட்டை விடுதலை செய்யவும் ஊவா மாகாணத்தில் விவசாயத்துறையை முன்னேற்றவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இதனால், ஊவா மாகாண மக்கள் அரசாங்கத்துடனே உள்ளனர். ஐ. தே. க. மீண்டும் படுதோல்வி அடைவது உறுதியாகவிட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கூறியதாவது:-

நான் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தேன். அங்கு மக்கள் சுதந்திரமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருடங்களாக இழ ந்த அபிவிருத்திப் பணிகள் அங்கு மீண்டும் முன்னெடுக் கப்படுகின்றன. தேர்தல் பணிகள் எதுவித வன்முறைகளும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது. ஊவா மாகாணத்திலே ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் தேசிய கூட்ட மைப்புத் தலைவர்களுக்கு யாழ்ப்பாணம் சென்று பிர சாரப் பணிகளில் ஈடுபடும் சூழல் காணப்படுகிறது.

மோதல் காரணமாக அதிகமான மக்கள் வேறு இடங் களுக்குச் சென்றுள்ளனர். ஒரு இலட்சம் வாக்காளர்களில் 50 வீதமானவர்களே அங்குள்ளனர். யாழ். மக்களின் விவசாய உற்பத்திகளை கொழும்புக்கு அனுப்பும் சூழல் காணப்படுகிறது. மீன்பிடித்தடை நீக்கப் பட்டுள்ளதால் மீனவர் ஒருவர் ஒரு நாளில் 17 ஆயிரம் ரூபாவரை உழைக்கக் கூடியதாக உள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply