மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு நிவாரணப் பொருள்கள்

வடபகுதி முன்னரங்கப் பகுதியில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கான நிவாரணப் பொருள்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
படையினருக்கு நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் நோக்கில் மாத்தறையிலிருந்து மதவாச்சிவரை புகையிரதமொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து ஒவ்வொரு பகுதியாக நிவாரணங்களைச் சேகரித்துவரும் இந்தப் புகையிரதம் நேற்று சனிக்கிழமை புறக்கோட்டை புகையிரதநிலையத்தில் நிவாரணப் பொருள்களை சேகரித்தது.

வடபகுதியில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் மற்றும் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காவே இந்த நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கான குடிநீர், சத்துணவுப் பொருள்கள், உலருணவுப் பொருள்கள் என்பன இந்த நிவாரணப் பொருள்களில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, வடபகுதி மோதலில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கான ஒருதொகுதி குடிநீர் போத்தல்கள் மற்றும் இளநீர் போன்றன பௌத்த அமைப்பொன்றினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply