இடம்பெயர்ந்தோரின் பிரச்சினை அரசியலுக்கு அப்பாற்பட்டது
எந்தவொரு நாட்டினதும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவிக்கும் கருத்துகள் காத்திரமானவையாக இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியவர் அவர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் சிறுபிள் ளைத்தனமான கருத்துகளையோ கேலிக்குரிய கருத்துகளையோ வெளியிடுவது அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு அகெளரவத்தையும் அவமதிப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவர் போல் தெரியவில்லை. மனம் போனபடி சிறுபிள்ளைத்தனமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்.
அரசாங்கத் தலைவர்கள் அடிக்கடி வவு னியாவுக்குச் சென்றுவரும் நிலையில் முகாம்களில் உள்ளவர்களை ஏன் விடுவி க்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலை வர் கேள்வி எழுப்பியிருப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களையே அவர் முகாம்களில் உள்ளவர்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் கொழும்புக்குச் சுற்றுலா வந்து போவதற்காக அங்கு தங்கியிருக்கவில்லை. தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறுவதற்காகத் தங்கி யிருப்பவர்கள். வவுனியாவுக்குச் சென்று வரும் அரசாங்கத் தலைவர்களுடனும் அரசாங்க உத்தியோகத்தர்களுடனும் அவர்களை ஒப்பிட முடியாது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளி யேறுவதென்றால், தங்கள் சொந்தக் கிராமங்களில் குளியேறுவதற்காக வெளியேறுவதாகவே இருக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பும் அதுவே. அந்த எதிர் பார்ப்பை இயன்றளவு விரைவில் நிறை வேற்றுவதற்கான செயற்பாடுகளுக்காகவே அரசாங்கத் தலைவர்கள் அடிக்கடி வவுனி யாவுக்குச் சென்று வருகின்றனர். இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றாமல் அங்கு மக் களைக் குடியேற்றுவது சாத்தியமில்லை. இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றும் போது அவர்கள் எவ்விதமான சிரமத்துக்கும் உள்ளாகாதிருப்பதை உறுதிப்படுத்தும் பொறு ப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எனவே, கண்ணிவெடிகளை அகற்றாமல் அம்மக் களை மீளக்குடியமர்த்தக் கூடாது.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற் படுகின்றது. இப்பணிக்காக ஜெர்மனியிலிருந்து இருபத்தைந்து பயிற்றப்பட்ட நாய்கள் வரவிருக்கின்றன. கிராமங்கிராமமாகக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மக் கள் அங்கு குடியமர்த்தப்படுவர். அறுபத் தெட்டுக் கிராமங்களில் விரைவில் மீள் குடியேற்றம் இடம்பெறும் என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடிப் பிரச்சினை இல்லாத இடங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த இட ங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார் கள். நேற்று முன்தினம் வவுனியா நிவார ணக் கிராமங்களிலிருந்து 4000 பேரும் யாழ் ப்பாணம் நிவாரண முகாம்களிலிருந்து 3112 பேரும் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களைக் கண்ணிவெடிகள் அகற்றிய பின்னரே அவ ர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியும் என்பதும் கண்ணிவெடிப் பாதி ப்பு இல்லாத பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள் என்பதும் எதிர்க் கட்சித் தலைவருக்குத் தெரியாதிருக்க முடியாது. அரசியல் லாபத்துக்காகவே சிறு பிள்ளைத்தனமான கேள்வியை எழுப்புகின்றார். இடம்பெயர்ந்தோரின் பிரச்சினை மனி தாபிமானம் சம்பந்தப்பட்து. அதை அரசியல் ஆக்காதிருப்பதே கெளரவமானது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply