தாய்லாந்தில் கைதான கே.பி மீது கொழும்பில் விசாரணை

புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கடந்த புதனன்று இரவு கைது செய்யப்பட்டதாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.இவர் இப்போது கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டு வந்தார்.இலங்கையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கொலைகளுடன் தொடர்புள்ள கே. பி. சர்வதேச மட்டத்தில் தேடப்பட்டு வந்தவர். ‘இன்டர்போல்’ என்று அழைக்கப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடமாடியவரெனத் தெரியவந்துள்ளது.

இவரது கைதையடுத்து சர்வதேச ரீதியிலான புலிகளின் வலைப்பிண்ணல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply