கே.பி, இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்
ஆசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப் பட்ட புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நேற்றுக் காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்புப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி, இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கெஹலிய கூறினார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்று நடந்தது. இந்த மாநாட்டி லேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார். தன்னைத்தானே தலைவரென உரிமை கோரியிருந்த கே.பி.யின் கைது ஊடாக உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு பயங்கர வாத செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ, புலிக ளின் தலைவர்தான் தானென கூறிக்கொண்டி ருந்தாலோ அவர்களை கைதுசெய்யும் ஆற்றல் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு உண்டு என்பதை கே.பி.யின் கைது மூலம் சர்வதே சத்துக்கு உணர்த்தியிருக்கிறோம் என்றும் அமை ச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து புலிக ளின் அடுத்த தலைவர் நான்தான் என கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வந்த கே.பி, சர்வதேச பொலிஸாரினால் தேடப் பட்டுவந்த நபர் மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் நேரடி தொடர்பு கொண்டவராகவும் தேடப்பட்டு வந்துள்ளார். இவரைக் கைது செய்வதற்காக இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் ஆசிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவொன்றும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
கே.பி. எந்த நாட்டில் வைத்து கைது செய்ய ப்பட்டார்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது:
பலராலும் தேடப்பட்டுவந்த கே.பி, இப் போது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டும் விட்டார். அவர் ஆசிய பிராந்திய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட் டார் என்று மட்டுமே கூறமுடியும் என்றார்.
ஆசிய பிராந்தியத்திலுள்ள எமது நட்பு நாடுகளின் புலனாய்வுப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. பல நாடுகளினாலும் தேடப்பட்டு வந்தவர். இந்தியாவும் அவரை கைது செய்யவிருந்தது.
இந்த நிலையில் இவ்வாறான நாடுகள் அவரை தம்மிடம் ஒப்படைக்கும் படி கேட்டால் ஒப்படைப்பீர்களா? ஏதாவது ஒரு நாடு இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறதா? என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:
எந்தவொரு நாடும் தனிப்பட்ட விதத்தில் இவ்வாறான கோரிக்கையை இதுவரை விடுக்க வில்லை. எனினும் பொது நலவாய நாடுகளு க்கிடையே இவ்வாறான கைதுகள் பரிமாற்றம் தொடர்பான ஒவ்வொரு விதமான உடன்படிக் கைகள் அமுலில் உள்ளன. இவ்வாறான உடன்படிக்கைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றின் பிரகாரம் செயற்படவும் நாம் ஆயத்த மாகவும் உள்ளோம் எனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலியவுடன் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. ரத்நாயக்க, விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேக்கர, ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.
1955 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காங்கேசன்துறையில் பிறந்த கே.பி.யின் இயற்பெயர் சன்முகம் குமரன் தர்மலிங்கம் ஆகும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் சிங்கள மொழிகளில் இவர் நல்ல பரிச்சயமிக்கவர். 1983 ஆம் ஆண்டு இவர் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply