கே.பி.யின் கைது மூலம் உலகில் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் அழிப்பு

கே.பி.யின் கைது மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறதென பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷ தெரிவித்தார். புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆசிய பிராந்திய நாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.பல்வேறு நாடுகளின் உதவியுடன் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டுவந்த கடின உழைப்பினாலேயே இந்த முக்கிய பயங்கர வாதியைக் கைது செய்ய முடிந்துள்ளது.

இவரின் கைதுடன் புலிகளின் செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. கே.பி. புலிகள் இயக்கத்தை மீளமைப்பதில் மிகவும் பிஸியாக இருந்ததோடு நாடு கடந்த அரசொன்றை அமைப்பதற்கும் முயற்சிசெய்து கொண்டிருந்தார். உடனடியாகச் செயற்பட்டதனால், சகல திட்டங்களையும் முறியடித்துள்ளோம்.

கே.பியைக் கைதுசெய்ய பல்வேறு நாடுகள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கின. அவைகள் என்றும் பெறுமதிமிக்கதும் பாராட்டுக்குரியதுமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச உறவுகளின் அடிப்படையிலேயே இது மிகவும் சாத்தியமாகி யுள்ளது. கே.பியின் கைது மூலம், இலங்கையில் மாத்திரமல்ல, முழு உலகிலுமே புலிகளின் செயற்பாடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply