யாழ் மாநகர சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சியான ஜக்கிய மகக்ள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் முதல் தடவையாக தென்னிலங்கைக் கட்சியொன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் முதல் தடவையாக வெற்றி பெற்ற ஜக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பு பத்தாயிரத்து அறுநூற்று இரண்டு வாக்குகளைப் பெற்று (50.67வீதம்) 13 ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமழரசுக் கட்சி எட்டாயிரத்து எட்டு வாக்குகளைப் பெற்று (38.28வீதம்) 8ஆசனங்களையும், சுயேச்சைக்குழு 1 (கப்பல்) பதினொராயிரத்தி நூற்று எழுபத்தைந்து (5.62 வீதம்) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிரத்தி ஏழு வாக்குகளைப் பெற்று (4.21 வீதம்) ஓரு ஆசனத்தையும் பெற்றள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு 02 பூட்டு ஆகிழயவற்றிற்க்கு எந்த ஒரு இடமும் கிடைக்கவில்லை. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து நானுற்று பதினேழாகும்(100417). பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இருபத்து இரண்டாயிரத்து இரு நாற்று எண்பது(22280 )வாக்ககுகள். செல்லு படியற்றவை ஆயிரத்து முன்னாற்று ஐம்பத்தெட்டு(1358 )வாக்குகள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply