உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன், ரஷியஅதிபர் பேச்சு

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுடனும் சிறந்த உறவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், பல ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசி மூலம் விவாதித்து வருகிறார்.

இஸ்ரேல் நாட்டில், புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.  இந்த பேச்சுவார்த்தையின் போது பென்னெட் இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பென்னடுடன்

புதின் மீண்டும் பேசியதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

புதின்-பென்னட் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் 90 நிமிடம் நீடித்ததாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை, போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள், தூதரக ரீதியான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply