தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு 424 விருப்பு வாக்குகள்
யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரிக்கு 424 விருப்பு வாக்குகள் கிட்டியுள்ளன. நடைபெற்று முடிந்த யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல்களில் வீ.ஆனந்தசங்கரி போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் சார்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதி கூடிய வாக்குகள் என்பதனால் ஆனந்த சங்கரி மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முடியப்பு ரெமிடியாஸ் மொத்தமாக 4223 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் அவருக்கு விருப்பு வாக்காக 2558 வாக்குகள் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply