ஐக்கிய தேசியக் கட்சி உப தலைவர் பதவிக்கு காதர் எம் பி விண்ணப்பம்
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடங்களுக்கு புதிதாக இருவர் நியமிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் பதவிக்கு காலி மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும் உப தலைவர் பதவிக்கு கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதரும் உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளனர்.
கரு ஜயசூரிய அரச தரப்புக்கு மாறியதால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply