முகாம்களிலிருந்து இலஞ்சம் கொடுத்து வெளியேறியுள்ளோரின் எண்ணிக்கை வெளியிடப்படும்: அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ்
முகாம்களிலிருந்து இலஞ்சம் கொடுத்து வெளியேறியுள்ளோரின் எண்ணிக்கை விரைவில் வெளியிடப்படுமென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.வவுனியா முகாம்களிலிருந்து 50ஆயிரம் பேர் இலஞ்சம் கொடுத்து வெளியேறியுள்ளனரென தகவல் கிடைத்திருப்பதாகக் கூறிய பி.எம்.எஸ்.சாள்ஸ்,முகாம்களிலிருந்து எத்தனை பேர் வெளியேறியுள்ளனரென நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 90 வீதம் பூர்த்தியடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.இன்னும் ஓரிரு தினங்களில் முகாம்களிலிருந்து வெளியோர் தொடர்பில் சரியான எண்ணிக்கை வெளியிடப்படுமெனவும் அவர் கூறினார். முகாம்களிலிருந்து இலஞ்சம் கொடுத்து வெளியேறியோர் தொடர்பில் உயர்மட்ட பொலிஸ் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முகாம்களிலிருந்து இலஞ்சம் கொடுத்து வெளியேறியிருக்கும் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்கமுடியாதெனவும் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply