ஏ-9 வீதியூடாக நேரடி பேரூந்துசேவையை நடத்த இன்னும் 2 மாதங்கள் செல்லும்: டலஸ் அழகப்பெரும
ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும், கொழும்புக்கும் இடையிலான நேரடி பேரூந்துசேவையை நடத்த இன்னும் 2 மாதங்கள் செல்லுமென போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும், வவுனியாவுக்கும் இடையில் படையினரின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்துசேவை நடத்தப்படுவதுடன், வவுனியாவிலிருந்து, கொழும்புக்கு செல்வதற்கு இணைப்பு பேரூந்து மற்றும் புகையிரதசேவை நடைபெறுகிறதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஏ-9 வீதியூடாக யாழ் குடாநாட்டு மக்கள் மாத்திரமே வவுனியாவுக்குச் சென்று திரும்பிச்செல்லமுடியுமெனக் கூறிய அமைச்சர், தென்பகுதியிலிருந்து ஏ-9 வீதியூடாக எவரும் குடாநாட்டுக்கு செல்லமுடியாதெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் குடாநாட்டிலிருந்து, தென்பகுதிக்கு பயணிக்கும் மக்கள் படையினரிடமிருந்து பாஸ் அனுமதி பெறவேண்டுமெனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply