முகாம்களிலிருக்கும் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தவேண்டும்: அமெரிக்கா

முகாம்களிலிருக்கும் பொது மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதப் படுத்தவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே, அகதிகள் மற்றும் மீள் குடியேற்றத்திற்கான அமெரிக்க பிரதிச்செயலாளர் எரிக் ஸ்வார்ட்ஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். 

முகாம்களில் தங்கியிருக்கும்  2 இலட்சத்து 80ஆயிரம் பேரில் 75ஆயிரம் பேரை இந்தமாத இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுமென்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழியை வரவேற்றுள்ள எரிக் ஸ்வார்ட்ஸ், இதனைப்போன்று ஏனைய மக்களும் விரைவில் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டார். முகாம்களிலிருக்கும் மக்களுக்கு, அமெரிக்க நிவாரண உதவிகளை வழங்கியிருப்பதுடன், அந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு மேலும் உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராகவிருப்பதாகவும் எரிக் ஸ்வார்ட்ஸ் தெரிவித்தார். எனினும், மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அவர்களை முகாம்களில் தடுத்துவைத்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும் அவர் கூறினார். மீள்குடியேற்றத்தின்போது, இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையெனவும் எரிக் ஸ்வார்ட்ஸ் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply