ஜனாதிபதியின் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டே பேராயர் அழைப்பை ஏற்றேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித்

சமாதானம் மற்றும் அபிவிருத் தியை அடிப்படையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டே புதிய பேராயருக்கான அழைப்பை ஏற்றுகொண்டதாக கொழும்பு மறைமாவட்ட புதிய பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். எமது சமூகம் சிறிதானாலும் பெளத்த அரசர்களுக்கு எல்லாக்காலத்திலும் பங்களிப்புகளைச் செய்துள்ளது. நாம் எந்த சமயத்தையும் ஆக்கிரமிப்புச் செய்ய ஒருபோதும் நினைத்ததில்லை. மாறாக சகல மதத் தலைவர்களோடும் கைகோர்த்து தாய் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பூரண பங்களிப்பை வழங்குவதே எமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய பேராயரைக் கெளரவி க்கும் விசேட வைபவமொன்று நேற்று கொழும்பு பண்டாரநா யக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ வழிவகுப்பதே கத்தோலிக்க சமயத்தின் நோக்கம். எனக்கு இந்தப் பதவி புதிதல்ல. நான் பல்வேறு தூதுச் சேவைகளில் ஈடுபட்டவன். ஐக்கிய இலங்கையை உருவாக்குவது பிரதானமானது. அதற்குப் பூரண ஒத்துழைப்பை நாம் வழங்கு வோம். அதற்காகச் சகலரும் கைகோர்த்துச் செயற்படுவது அவசியம். கடந்த முப்பது வருடகாலங்களாக ஆயுதம் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து ஒரு தமிழ்க் குழு இயங்கியுள்ளது. தமிழ் தலைவர்கள் சிந்தித்துச் செயற்பட்டிருந்தால் இதனைத் தவிர்த்து சிறந்த பலன்களைப் பெற்றிருக்க முடியும் என்பதே எனது நம்பிக்கை.

தமிழ் மக்கள் தங்களைத் திசைதிருப்புபவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம். அடிப்படை வாதிகளின் பிடியில் அவர்கள் மீண்டும் அகப்பட்டுவிடக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply