தமிழ் மக்களிற்காக குரல் கொடுப்பதால் புலிகளின் ஆதரவாளரென அரசு முத்திரை குத்த முயல்கிறது-ஜெயலத் ஜயவர்தன

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் 200,000 அதிகமான மக்கள் போதிய உணவு,மருத்துவ வசதிகள் , குடிநீர் மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அவதிப் படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நிவாரண மற்றும் மனித உரிமைகள் விடயங்களிற்கு பொறுப்பானவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் தமிழ் மக்கள் சார்பாக குரல் கொடுப்பாதால் அரசாங்கம் தன்னை விடுதலை புலிகளின் ஆதரவாளர் என முத்திரை குத்த முயல்வதாக ஜெயலத் ஜயவர்தன தெரிவித்தார்.ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டையடுத்து வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வன்னியில் அவதிப்படும் மக்களிற்கு நிவாரண பொருட்களை வழங்கும் இந்திய அரசின் முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. வன்னியில் யுத்தம் காரணமாக அவதிப்படும் மக்களிற்கு அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்த இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அத்துடன் இவ் அத்தியாவசிய பொருட்களை பல இடர்பாடுகளிற்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்களிற்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply